Gavitha / 2016 மார்ச் 12 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை -செல்வநாயக புரம் பாடசாலைக்கு அருகில் வைத்து, இளைஞனொருவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 7.45க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -நித்தியபுரி -01வது ஒழுங்கையில் வசித்து வரும் வீ .விதுசன் (19 வயது ) என்ற இளைஞனே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபரை தேடி வருவதாகவும் அதில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago