2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வாள்வெட்டுச் சம்பவம்; மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 07 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில்; 03 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் மேற்படி பகுதியைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர்  03 பேரைக் கொண்ட குழுவினரின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தில் பலியான நபர், அவரது மைத்துனரைக் கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 03 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையிலேயே இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில்  வாள்வெட்டில் பலியானவரின் மைத்துனர்கள் 03 பேரைக் கைதுசெய்ததாக  பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .