Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
இலங்கை அஞ்சல் திணைக்களம் ஆரம்பித்து 201 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அது தற்போது வழங்கி வரும் சேவைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வீதி ஊர்வலம், கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில், இன்று (04) காலை இடம்பெற்றது.
இதன்போது, கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில், துண்டுப் பிரசுர விநியோகம் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மின்சாரக் கட்டணம்,NSB பணப் பரிமாற்றம், ஸ்ரீ லங்கா மொபிடெல் கட்டணம், மொபிடெல் ரீலோட், ஸ்ரீ லங்கா டெலிகொம் கட்டணம் ஆகிய சேவைகளுக்காக. கிண்ணியா தபாலக ஊழியர்களை, தொலைபேசி மூலம் வீட்டுக்கே வரவழைத்து குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக 026 2236250 மற்றும் 026 2236253 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொது மக்கள் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி, சம்பத் வங்கி, ஸ்ரீ லங்கா மொபிடெல் நிறுவனம் என்பன, இந்த வீதி ஊர்வலத்துக்கு அனுசரணை வழங்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
5 hours ago