Sudharshini / 2016 ஜூலை 06 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நீதிமன்ற சந்தியில் இன்று (06) மோட்டார் சைக்கிளுடன் லொறியொன்று மோதியதில் தந்தையும் மகனும் காயமடைந்துள்ளனர். இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கன்னியா வீதியில் மோட்டார் சைக்கிளும் -முச்சக்கர வண்டியும் மோதியதில் திருகோணமலை-வில்கம் விகாரை- விகாரை வீதியைச் சேர்ந்த ஆர்.பீ.கசுன் மதுசங்க (24 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் விபத்து தொடர்பாக உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் -மோட்டார் சைக்கிள் மோதியதில், துவிச்சக்கர வண்டியைச் செலுத்திய முள்ளிப்பொத்தானை-சிறாஜ் நகரைச்சேர்ந்த ஏ.அப்துல்லாஹ் (60 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், திருகோணமலை-நெவில் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் திருகோணமலை-நெவில் வீதியைச் சேர்ந்த பீ.பிரபாத் (25 வயது) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
9 hours ago