2025 மே 14, புதன்கிழமை

‘வகுப்புகளை இடைநிறுத்தவும்’

பொன் ஆனந்தம்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறக்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் சில மணித்தியாலங்களுக்காவது பிரத்தியேக வகுப்புகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம,  மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம் பகிரங்கக் கோரிக்கையை விடுத்தார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பான பல கோரிக்கைளை, சமயத்தலைவர்கள் தன்னிடம் விடுத்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி அமைப்புகளால் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்படுவதனால், அறநெறிக்கல்விக்கு மாணவர்கள் செல்வது குறைவடைவதாக, சமயத்தலைவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகக்  குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இதுதொடர்பாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சருடனும் அமைச்சரவையுடனும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .