2025 மே 19, திங்கட்கிழமை

வன இலாகா அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் முறுகல்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் வன இலாகா அதிகாரிகளுக்கும்- பொதுமக்களுக்கும் இடையில் இன்று (01)  முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  

சேனைப் பயிர்ச்செய்கை செய்கின்ற இடத்துக்கு வன இலாகா அதிகாரிகள் சென்று அங்கு சேனை பயிர்ச் மேற்கொள்ள வேண்டாமெனவும் இது அரசுக்குரிய காணி எனத் தெரியப்படுத்தியதையடுத்துடன், அரச காணியென அடையாளப்படுத்த கல் போட முற்பட்ட போது, இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான  ஆரியவதி கலப்பத்தி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதுடன்,   பல வருடகாலமாக செய்துவந்த சேனைப் பயிர்ச்செய்கை செய்வதற்கு பொதுமக்களுக்கு இடமளிக்குமாறும் எதிர்காலத்தில் பிரதேச செயலாளரின் உதவியைப் பெற்று சேனைப் பயிர்ச் செய்கையாளர்களுக்குக் காணியைப் பகிர்ந்தளிப்பதற்குரிய  நடவடிக்கைகளை  எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X