Thipaan / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
விதிமுறைகளை மீறி தோப்பூரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2 வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேறகொண்டுள்ளதாக, திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தோப்பூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை, திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோதே இவ்வர்த்தகர்கள் விதிமுறைகளை மீறி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ் இரண்டு வர்த்தகர்களும் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேலதிகமாக விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டமை, காலவதியான பொருட்களை வர்த்தக நிலையங்களில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026