Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலையில், ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை வங்கியின் ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்ததாகக் கூறப்படும் களுத்துறை அட்டுலுகமவைச் சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (35 வயது) என்பவரை தேடுவதற்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
களுத்துறை, அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை ஏலத்தில் வாங்கவந்து, ஏலம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இடைநடுவில், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வெளியே சென்றவரைக் காணவில்லை என்று, அவருடைய தந்தையான முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் முறைப்பாடு செய்திருந்தார்.
இம்முறைப்பாடு தொடர்பாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமெரா சோதனை செய்யப்பட்டு வருவதோடு, அவர் ஊரிலிருந்து பயணம் மேற்கொண்ட இடம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
30 minute ago
37 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
42 minute ago
51 minute ago