Princiya Dixci / 2016 ஜூன் 05 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பதுர்தீன் சியானா
வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிகாமல், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 12 பேரில், 11 பேரை, தலா 01 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறும் 03 வழக்குகளுக்குச் சமுகமளிக்காமல் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 39 வயதுடைய நபரை, எதிர்வரும் 07ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பெர்ணான்டோ உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில், வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காத நிலையில், நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 12 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் 08 வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட 05பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அதில் 03 வழக்குகளில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 02 பேரும் கிண்ணியா பொலிஸ் பிரிவில் 03 பேரும் நிலாவெளி பொலிஸ் பிரிவில் ஒருவரும் துறைமுகப் பொலிஸாரினால் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை, திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026