Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2025 ஜனவரி 26 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் காலத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதிகளை அள்ளி வழங்கியதை போன்று காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புகளை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம். ஐ. எம் புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பல துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள். பெரும் பொருளாதார கஷ்டம் ஈஸ்டர் தாக்குதல் டெங்கு கொரோனா என பல சவால்களுக்கு முகங்கொடுத்து உள்வாரி வெளிவாரி பட்டங்களை சுமார் 4, 5 வருட கற்கை களை சிறப்பு பொது பட்டம் என கற்று பூரணமாக்கியதன் பின்பும் தீர்வில்லாமல் தவிக்கிறோம். எங்களை போன்ற இளைஞர் யுவதிகளின் குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளின் வாக்குகளை வைத்து ஆட்சியை பிடித்த அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவு திட்டம் ஊடாக தீர்வை வழங்க வேண்டும்.
ஆசிரியர்களுக்காக 30 ஆயிரம் வெற்றிடங்கள் கிராம சேவகர்களுக்காக 3000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதை பட்டதாரிகளுக்கு பரீட்சை இன்றி பொது நியமனங்கள் ஊடாக அரச துறையில் நியமனங்களை வழங்க வேண்டும் பல் வேறு பொருளாதார கஷ்டங்களுடன் திருமணம் முடித்த நிலையில் வாழும் எங்களை நிராகரிக்காது கற்ற கல்விக்கான பட்டத்துக்கு தீர்வை தாருங்கள். போட்டி பரீட்சை என்ற பெயரில் பரீட்சைக்கு முகங்கொடுக்க முடியாத கேள்விகளை எடுத்து தோல்வியை சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது.
தற்போது கற்கும் உயர்தரம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. 2021ம் ஆண்டு முதல் உள்வாரி வெளிவாரி பட்டங்களுடன் பலர் பட்டதாரிகளாக தொழில் இன்றி அலைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதிய அரசாங்கத்தின் கீழ் பொதுவான நியமனங்களை எங்களுக்கு வழங்க ஆளுநர்கள், துறைசார் அமைச்சுக்கள் புதிய ஜனாதிபதி போன்றோர்கள் மிக கரிசனையுடன் செயற்படுங்கள் ” என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago