2025 மே 14, புதன்கிழமை

‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 20 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றுவதே, தன்னுடைய நோக்கமாகுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி டேவிட் பெல்ட்மென்ட், கிழக்கு மாகாணத்துக்கு வருகைதந்திருந்தார்.  

அவர், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ரோஹித போகல்லாகம கருத்து தெரிவிக்கையில்,  

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம், மற்றும் மீள்குடியேற்றம் பற்றியும் கலந்துறையாடப்பட்டது. அத்துடன், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமென அவருக்கு, நான் வலியுறுத்தினேன்.  

அதுமட்டுமன்றி, சகல சமுகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி, சகலவிதமான கசப்பான தன்மைகளும் கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தான் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.  

கிழக்கு மாகாணத்தில், நல்லிணக்கத்துக்கு, முன்னுதாரணமாக சம்பூர் திகழ்வதாக, தான் சுட்டிக்காட்டியதுடன், கிழக்கு மாகாண சபையின் கால எல்லை செப்டெம்பர் 27 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாகவும் மாகாண சபை தேர்தல் இடம் பெறும் எனவும் அவரிடம் தெரிவித்ததாக ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .