2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க, தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, தம்பலகாமப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.

இதன்போது, சுமார் 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X