2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விசர் நாய் கடியால் எழுவர் பாதிப்பு

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், இக்பால் நகர் பகுதியில் விசர் நாய் கடிக்குள்ளான சிறுவர்கள் மூவர் உள்ளடங்களாக ஏழு பேர், மூதூர் தள வைத்தியசாலையில் இன்று (20) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்பால் நகர், சல்மா பெண்கள் வித்தியாலயத்துக்கு முன்பாக நின்று கொண்டிருந்தவர்களையும் வீதியால் சென்றவர்களையும், விசர் நாயொன்று துரத்தித் துரத்திக் கடித்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த நாயைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .