2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில், விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29) திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், கொழும்பு டெலிவிஷன் மற்றும் கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்குவும் இணைந்து உபகரணங்களை  வழங்கி வைத்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில்,  விசேட தேவையுடை 237 பேருக்கு உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகல்லாகம கலந்து கொண்டதுடன், விசேட தேவையுடையோருக்கு  நாற்காலிகள், ஊன்றுகோல்கள்  போன்றவற்றை வழங்கிவைத்தனர்.

இதேவேளை, கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்குவினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் போஷாக்கு பொதிகள்  வழங்கப்படவுள்ளதாகவும் கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், தம்பலகாமம், கந்தளாய்  பிரதேச சபை தலைவர் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .