எப். முபாரக் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளிப் பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை, தன்னுடன் விடுதியில் தங்கவைத்திருந்த பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர், சிறுமியை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல், சிறுமியைத் தனது விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரின் நண்பர்கள் மூலம் குறித்த விடுதியை பொலிஸார் கண்டுபிடித்து, இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.
சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .