2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வினாத் தாள்கள் விநியோகம்; பெற்றோர் விசனம்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை கல்வி வலயத்திலுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கும் சாதாரண தர மாணவர்களுக்கும் வீடு வீடாகச் சென்று மாதிரி வினாத் தாள்கள் விநியோகத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றமை கொரொனா தொற்றுக்கு சாதகமாக அமையுமெனவும் இவ்விடயத்தில் கல்வித் திணைக்களம் சகாதார துறையின் ஆலோசனையைப் பெற்று, இவற்றை முன்னெடுக்குமாறு, பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். இந்த நிலையில் பாடசாலை ஆசிரியர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய, வீடு வீடாகச் சென்று மாதிரி வினாத் தாள்களை விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், வினாத்தாள்கள் அச்சிடும் இடம், விநியோகிக்கும் இடம் என்பன கொரோனா தெற்றுள்ள நபரோ அல்லது இடமாக இருந்தால் இந்த தொற்று மாணவர்கள் மத்தியில் பரவ ஏதுவாக அமையுமென பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாணவர்களை இணையம் மூலமும் அரசின் சுயாதீன தொலைக்காட்சி மூலமும் சில தனியார் கல்விச் சேவையின் மூலமும் கற்பித்தல் நடவடிக்கை சிறப்பாக இடம் பெறுகின்றது. இந்த நிலையில், வீடு வீடாக மாதிரி வினாத் தாள் விநியோகிப்பது அபாயகரமான ஒரு செயலாக நாம் கருதுவதானவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது மக்கள் அதிகமாக கூடுகின்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தால் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை 27ஆம் திகதி திருகோணமலையின் முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களதும் சாதாரண தர மாணவர்களதும் பெற்றோர்களை, மாதிரி வினாத் தாள் பெற வருகை தருமாறு, கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புக்கு அமைய, ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

எனவே, இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X