2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 29 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், தோப்பூர் 58ஆம் கட்டைச் சந்தியில், சீமெந்து ஏற்றிவந்த லொறியும் பட்டா வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், பட்டா வாகனத்தில் பயணித்த ஒருவர், ஸ்தலத்திலேயே பலியானாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற இவ்விபத்தில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட, தோப்பூர் செல்வநகரைச் சேர்ந்த அப்துல் கரீம் றிஸ்வான் (வயது 46) என்பவரே பலியாகியுள்ளார்.

அத்துடன், அவருக்கு உதவியாகச் சென்ற, தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த என். லெப்பை (வயது 55) என்பவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறிச் சாரதியை, பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X