Editorial / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்
குச்சவெளி பகுதியில் இருந்து புடவைக்கட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் திருகோணமலை - புல்மோட்டை வீதியில், குச்சவெளி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள மின் கம்பத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய நபர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், அன்வர் முஹமட் (வயது 24) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் முஹமட் பாசீக் (வயது 22) படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம், குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில், திருகோணமலை பொதுவைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .