Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் காளி பாஞ்சான் 'சிவப்பு பாலம் ' பகுதியில் டிப்பர் வாகனம் - மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம், இன்று (19) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது .
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து கிண்ணியா வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மூதூர் பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஸ்தலத்தில் உயிரிழந்தவர் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த தௌபீக் ஹருனி (வயது 23) என்பவராவர்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துகுள் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்டமையால் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் வெளியாகியதுடன், இளைஞன் உடல் கருகிப் பலியானர் என்பதுடன், விபத்துக்குள்ளான டிப்பர் தீப்பற்றியுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த நபர், தம்பலகாமம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்)

3 minute ago
18 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
21 minute ago