Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்ட உள்துறைமுக வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சீனன் குடா பிரதேசத்தில் இருந்து நோயாளியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த வேனும் பிரத்தியோக வகுப்பு முடிந்து இரு பிள்ளைகளை அழைத்து வந்த தாயின் இருசக்கர மோட்டார் வாகனமும் மோதியதில் சிகிச்சைக்காக அழைத்து 54 வயதான பெண்மணி ஸ்தலத்தில் இறந்துள்ளார்.
இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த 10 மற்றும் 09வயதான இரு மாணவிகள் பலத்த காயமடைந்து திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 9 வயது மாணவி மரணமடைந்ததாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான வேன் வாகனம் துறைமுகப்பொலிஸிற்குள் எடுத்துவரப்பட்டதுடன் மேலதிக விசாரணையை துறைமுகப்பொலிஸார் மேற்கொள்கின்றனர். R
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago