Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் முற்சக்கர வண்டியுடன் லொறியொன்று, இன்று (09) மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லிகைத்தீவு, பெரியவெளி பகுதியைச் சேர்ந்த தியாகராஜா சிவசுப்ரமணியம் (76 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
சமுர்த்தியால் வழங்கப்படுகின்ற முதியவர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக, மல்லிகைத்தீவிலிருந்து பாலத்தோப்பூருக்குச் செல்லும் போதே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எஸ்.தவறாஷா (28 வயது), ஆனந்தம் மின்னொளி தேவி (47 வயது) ஆகியோர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் இரு முற்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில், திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.சத்தியவதி (64 வயது) எஸ்.அருட்செல்வம் (37 வயது) மற்றும் டி.சுபாசினி (16 வயது) ஆகிய மூவர் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு விபத்துகள் தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
46 minute ago