2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்துக்கு காரணமான சாரதிக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக்

 திருகோணமலை குச்சவெளி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவனின் உயிரிழப்புக்கு காரணமான சாரதியை  எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் ஞாயிற்றுக்கிழமை (14) உத்தரவிட்டார்.

திருகோணமலை – புல்மோட்டை வீதியில் குச்சவெளி நகரில் கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிளொன்றும் டிரக்டர் வண்டியொன்றும் மோதியதில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும் 07வயது சிறுவனும் 03வயது சிறுமியும் காயமடைந்துள்ளதை தொடர்ந்து குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் மொஹம்மது றினோஸ் நிஸ்ரி சரீப் எனும் 07வயது சிறுவன் பலியானார்.

இதனையடுத்து விபத்துக்கு காரணமான டிரக்டர் சாரதியை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .