Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் விரிவுரையாளரின் சடலம் இன்று (22) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
திருகோணமலை, வளாக விரிவுரையாளர் நடராசா போதநாயகி (29 வயது) இவரது சடலம் நேற்று (21) திருகோணமலை சங்கமித்த கடற்கரைப் பகுதியில் மீட்க்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலத்தில், சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, திருகோணமலை தலைமையக பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்கவிடம் இது தொடர்பில், அறிக்கையொன்றை சமர்ப்பித்தயைடுத்து மேலதிக நீதவான் பிரேத பரிசோதனையை முன்னெடுத்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் விடுமுறைக்கு சென்றுள்ளமையினால், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று பரிசோதனை முன்னெடுக்குமாறும் திருகோணமலை மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று (22) சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த விரிவுரையாளர் மூன்று மாத கர்பிணி எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago