Freelancer / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த பவுசரும், திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து லொறியும் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதியின் தூக்கத்தால்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ-பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026