Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 12 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், திருகோணமலை-பட்டியடி மீனவர் சனசமூக நிலையக் கட்டடத்தில் முன்னெடுக்கவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான காணிகளைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (12) இடம்பெற்றது.
மேற்படி கிராமத்தில் 50 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருவுலச்சீட்டின் மூலம் பயனாளிகளுக்கு குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில், தலா 750,000 ரூபாய் பெறுமதியில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான கொடுப்பனவுகள் ஏழு கட்டங்களாகப் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வீடமைப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹரூப் மேற்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago