2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஹலீம், தீஷான் அஹமட்

வீடமைப்பு  நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மானிய அடிப்படையில், கிண்ணியா - நடுஊற்று கிராமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள  30 வீடுகளைக் கொண்ட கிராம சக்தி வீடமைப்புத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப், அப்துல்லா மகரூப், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமார், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்  ஏ.எஸ்.எம். ரியாத் உட்பட கிண்ணியா நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், வீட்டுத்திட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X