2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வீடுகள் உடைத்து கொள்ளை; ஐவர் கைதாகினர்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவர், இன்று (10) கைதுசெய்யப்பட்டள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையூற்று பிரதேசத்தில் ஒன்றறை மாதங்களாக இடம்பெற்று வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொலைக்காட்சி, குளியலறை பொருள்கள், தையல் இயந்திரம், மின்விசிறி போன்ற பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன .

சந்தேகநபர்கள் ஜவரும், பாலையூற்று பிரதேசத்துச் சேர்ந்த 21, 22 வயதுடைய இளைஞர்கள் எனவும் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X