2025 மே 14, புதன்கிழமை

வீதி சேதமடைவது குறித்து மக்கள் கவலை

பொன் ஆனந்தம்   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கப்பல்துறை பிரதான வீதியில் நீர் தேங்கி நிற்பதால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதி சேதமடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீண்டகால மாக புனரமைக்கப்பட்டாமல் இருந்த இவ்வீதியின் 750 மீற்றர்  மட்டும் அண்மையில் புதிதாக புரமைக்கப்பட்டது. எனினும்,  ஆறு மாதங்கள்கூடச் செல்லாத நிலையில், வீதியின் ஓரங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் குறித்த பகுதியின் வீதி சேதமாகலாம் என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இவ்வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படும் வீதி எனவும் கூறப்படுகின்றது.எனவே, இவ்வீதியில் ஏற்படப்பபோகும் பாதிப்பை உடன் தடுத்து நிறுத்த உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வீதியின் மேலும் 500மீற்றர்  புனரமைப்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X