2025 மே 14, புதன்கிழமை

வீதிச்சமிக்ஞைகள் மாற்றப்பட்டதால் சாரதிகளுக்கு அசௌகரிகம்

வடமலை ராஜ்குமார்   / 2017 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிகள் புனரமைக்கப்பட்டு, வீதிச்சமிக்ஞைகள் மாற்றப்பட்டுள்ளதால் திருகோணமலை வீதிப் போக்குவரத்து சாரதிகளும் பொதுமக்களும் அசௌகரிகங்களக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக திருகோணமலை – கண்டி வீதியில் உள்ள அநுராதபுரச் சந்தியில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடம் ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டள்ளது. தற்போது இரு மருங்கிலும் கடைத் தொகுதியுள்ள ஓர் இடத்தில் இந்த பஸ் தரிப்பிடம் அமைந்துள்ளது.

இதனால் பஸ்ஸொன்றை நிறுத்தி, பயணிகளை ஏற்றும் வரை பின்னால்வரும் அனைத்து வாகனங்களும் காத்திருக்க வேண்டியுள்ளது. பாடசாலை ஆரம்பம் நேரம்; முடிவடையும் நேரம் மற்றும் அலுவலக நேரங்களில் அவை அதிகமான சௌகரிகங்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிய பஸ் தரிப்பிடங்களில் தற்போது நிழற்குடைகள் இல்லாததால் சிறுவர்கள், கற்பிணிகள், முதியோர் ஆகியோர் வெயிலிலும் மழையிலும் நின்று பஸ் ஏற வேண்டிய இக்கட்டன நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X