Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கு, இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பேராறு பகுதியில் இன்று (15) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிலர், கந்தளாய் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளுக்குக் கூரைகள், சிவிலிங் வேலைகள் போன்றவற்றை, மாதக்கணக்கில் தங்கி நின்றி மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், லொறியை, வழமை போன்று வீதியில் நிறுத்தி வைத்து விட்டு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலே, அதிகாலை வேளையில் லொறி தீக்கரையாக்கப்பட்டுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
35 minute ago
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
40 minute ago
48 minute ago