Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில, சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்றிரவு (08) 10 மணியளவில் திருகோணமலை பிராந்திய நச்சுத்தன்மையுடைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
47 வயதான இக்குடும்பஸ்தரிடமிருந்து 32 அடி 9 அங்குலம் நீளமுடைய டெட்கோட் வயார் 15 ரோல்கள், டெட்டேநெட்டர் 100 துண்டுகள் அடங்கிய 26 பெட்டிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றில் அடிப்படையிலேயே, இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரை, திருகோணமலை தலைமையாக பொலிஸில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago