2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வெருகல் ஆலயத்தில் கையெழுத்துப் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை வெருகல் ஆலய பிரமோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், திருக்கோணேஸ்வர பிரதேசத்தை புனித பிரதேசமாக்கக்கோறும் கையெழுத்துப் போராட்டம், ஆலய முன்றலில் இன்று (27) மேற்கொள்ளப்பட்டது. 

திருகோணமலை இராவணசேனை அமைப்பபால், திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின் முதல்கட்டமாக சேர்க்கப்பட்ட கையெழுத்தடங்கிய கோரிக்கைப் புத்தகம், இலங்கைக்கான  இந்திய தூதுவருக்கும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் அண்மையில் திருக்கோணேஸ்வரத்தில் வைத்து வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இப்போராட்டம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய பிரமோற்சவ இறுதி நிகழ்வுகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதுடன், இதில், அதிகளவான அடியார்கள், தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயம் மிகத்தொன்மை வாய்ந்தது. இவ்வாலயம் பல்வேறு தடைகள், நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்து வருகின்ற நிலையில், அவ்வாறான தடைகள் நீக்கப்பட்டு, ஆலயமும் பிரதேசமும் புனித நகராக்கப்பட்டு, ஆலயம் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கவேண்டுமெனக்கோரியே இக்கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .