Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்,ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத் துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தை வகிப்பது திருகோணமலை - நிலாவெளி கடற்கரை பிரதேசமாகும்.
என்றுமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நிலாவெளி கடற்கரையானது, தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளது வருகை தடைப்பட்டு, வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதன் காரணமாக, சுற்றுலாத்துறையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலாவெளி கடற்கரையிலிருந்து புறாத்தீவு, டொல்பின், திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு சவாரி சேவையில் ஈடுபடுவோர், தமது தொழிலை முன்னெடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலாப் படகுகளில் ஆசனங்கள் பொருத்தப்பட்டதனால் தம்மால் அப்படகுகளை மீன்பிடிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
17 May 2025