Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஜூன் 17 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது, மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள், கத்தி, கோடரி மற்றும் 284 ஈயக் குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேரை நேற்றிரவு (16) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை, யான் ஓயா பகுதியைச் சேர்ந்த சீனி முகம்மது சுலைமான் லெப்பை ( 54 வயது) மற்றும் றத்மலை பகுதியைச்சேர்ந்த ஹனீபா ரவூப் (45 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும், ரொட்டவெவ - மிரிஸ்வெவ உள் வீதியினூடாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, வீதிச்சோதனை சாவடியிலிருந்த பொலிஸாரைக் கண்டு மோட்டார் சைக்கிளை திருப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்று சோதனையிட்ட வேளை, மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் துப்பாக்கியைக் காட்டில் மறைத்து வைத்து தொடர்ச்சியாக வேட்டையாடும் தொழிலில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago