2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வேட்டையாடிய ஐவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் வேட்டையாடிய ஐவர், எருமை மாட்டு இறைச்சியுடன் நேற்றிரவு (24) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியொன்னைத் தம்வசம் வைத்துக்கொண்டு, இவர்கள் வேட்டையாடி வருவதாக விசேட பொலிஸார் அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர், திருகோணமலை, ரொட்டவெவயைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர், றத்மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X