Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 மே 27 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் ஆகியோருக்கிடையில், நேற்று (26) முற்பகல் அலரி மாளிகையில்அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது,
இதில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள்,காணி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிழக்கில் 17,00 பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்க நிதி ஒதுக்கீடுகளை வழங்கியதைப் போன்று அடுத்த கட்டம் கட்டமான நியமனங்களுக்கும் துரிதமாக நிதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்ததுடன், கிழக்கின் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
கிழக்கின் ஏனைய துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான ஆவணங்களையும் பிரதமரிடம் கையளித்ததுடன், அது தொடர்பிலும் கவனம் செலுத்தி அவற்றை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்,
மேலும், நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சர் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன், இவ்வாறான சம்பவங்கள் சிறுபான்மையினர் மத்தியில் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, பிரதமர் கருத்துத் தெரிவிக்கையில்,
சமூகங்களுக்கிடையேயான நல்லுறவை குழப்ப நினைக்கும் வன்முறையைதூண்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துவருகிறது. எந்தவோர் இனத்துக்கு அநீதி ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என்றார்.
இதன்போது, கிழக்கின் மாயக்கல்லி மலை விவகாரம் மற்றும் தோப்பூர் செல்வநகர் பிரச்சினை போன்றவற்றையும் கிழக்கு முதல்வர் பிரதமரிடம் தெரிவித்ததுடன் கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி,புதிய தொழிற்துறைகளை உருவாக்குதல் கடந்த 2013ஆம் ஆண்டு வரையான தொண்டராசிரியர்களை கல்விச்
சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் பிரதமருடன் கலந்துரையாடியாமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago