Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், 10 கோரிக்கைகளை முன்வைத்து, வைத்தியசாலை வளாகத்தில் இன்று (17) காலை 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை அடையாள அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வாரத்தில் மேலதிக 8 மணி நேர சம்பளத்தில், 180 நாட்களை நிறைவு செய்த சகல சுகாதார சிற்றூழியர்கள், சமயாசமய ஊழியர்கள் உடனடியாக நிரந்தரமாக்கிக் கொள்ளல், சீருடைக் கொடுப்பனவை 15,000 ரூபாயாக மாற்றுதல், சகல ஊழியர்களுக்கும் விசேட அனர்த்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளல், தாமதமான செவிலியர் நியமனங்களில் விரைவில் பெற்றுக்கொள்ளல், மேலதிக நேர வேலையை முறையில் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைளை அவர்கள் முன்வைத்தனர்.
அத்துடன், வைத்தியசாலை சிற்றூழியர்கள் குறையை நிவர்த்தி செய்தல், முகாமைத்துவ சேவை பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் நியமனம் பெறும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதிய உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக பல வருடங்களாகத் தாம் போராடி வருவதாகவும் கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினாலும் இதுவரை ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை எனவும் மிக விரைவில் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டர்.
தொடர்புடைய செய்தி - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு

9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025