2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வைத்தியர் விடுமுறை; நோயாளர்கள் அவதி

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் தள வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த அதிகமான நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம், இன்று (04) இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலையில் தினமும் காலை வேலையில் இரண்டு வைத்தியர்கள் நோயாளர்களைப் பார்வையிடுவர். நேற்றைய தினம்  ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையில் இருந்தமையால் அதிகமான நோயாளர்களை அவரால் பார்க்க முடியாது என்பதால், குறிப்பிட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே வைத்தியரைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதனால் தூர இடங்களான தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி, ஆஸாத்நகர், கங்குவேலி போன்ற கிராமங்களிலிருந்து வைத்திய சேவைப் பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

நோயாளர்களைப் பார்வையிடுகின்ற வைத்தியர் ஒருவர் விடுமுறை பெற்றால் அவருக்குப் பதிலீடாக மற்றுமொரு வைத்தியரை நியமிக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தால், நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்க்க முடியுமென, பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X