2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

ஹெரோய்ன் வைத்திருந்த குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீஹககே, இன்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

குறித்த நபர், திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றதத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து 1.22 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .