அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் -சாபி நகர் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த நால்வர் இன்று (23) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணிடம் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .