2025 மே 14, புதன்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை பஸ் நிலையத்தில் வைத்து ஹெரோய்னுடன் இருவர், திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மாளிகாவத்தையைச் 37 வயதான குடும்பஸ்தவர்  ஒருவரும் அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தைச்  சேர்ந்த  24 வயதான  இளைஞன் ஒருவருமே,  இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.

இவ்விருவரிடம் இருந்தும், தலா 30 மில்லிக்கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஹெரோய்ன் போதைப்பொருள், கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை, திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X