2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சிறிமா புறப்பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒக்டோபர் 02 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (23) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

சந்தேக நபரை, திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவின்  முன்னிலையில், ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக ஏற்கெனவே எட்டு குற்றச்சாட்டுகள் காணப்படுவதுடன், அதில் ஒரு குற்றச்சாட்டுக்கு திருகோணமலை நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் நீதவானின் முன்னிலையில் தெரிவித்தனர்

இதனையடு​தே, சந்தேகநபரை ஒக்டோபர் 02 திகதி  வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X