2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் மூவர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில், நேற்று (31) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோய்ன் வைத்திருந்த மூவர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை 4 ஆம் கட்டைப் பகுதியில் 570 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரையும், 50 மில்லிகிராம் ஹெரொய்ன் வைத்திருந்த நபரொருவரையும், சங்கமம் கிராமத்தில் 50 மில்லிகிராம் வைத்திருந்த நபரொருவரையும், பொலிஸார் கைதுசெய்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும், மேலதிக விசாரணைகளுக்காக,   திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X