2025 மே 14, புதன்கிழமை

ஹேரொய்னுடன் இருவர் கைது

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை -  உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியொன்றில் ஹேரொய்ன் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இருவரை, நேற்று (16) மாலை திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 100 கிராம் ஹேரொய்ன் மீட்கப்பட்டது.

கெக்கிராவ, மற்றும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 24, 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், குறித்த விடுதியில் வேலை பார்த்து வரும் நிலையிலேயே, ஹேரொய்ன் விற்பனை செய்து வந்துள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகளை இலக்கு வைத்து கூடுதலான பணத்துக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு, இன்று(17) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X