2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் திவிநெகுமவின் 04ஆவது வலயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, எ.எல்.அப்துல்அஸீஸ், எம்.இஷட்.எம்.இர்பான்


திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தின் 04ஆவது வலய அலுவலகம் ஹம்பாந்தோட்டை வுல் ஜென்ஸ் புதிய வீதியிலுள்ள பழைய தொழில் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய 03 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 04ஆவது வலயம் உள்ளது.

ஹம்பாந்தோட்டை வலயத்துக்கு பொறுப்பான மேலதிக பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஏ.பி.எஸ்.ரஞ்சித் குணசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
தென்மாகாணசபையின் சபாநாயகர் சோமவன்ச கோதாகொட, ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.ஈ.செய்ஷக், ஹம்பாந்தோட்டை நகரசபையின் பிரதி முதல்வர் திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இங்கு அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்

'புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டையும் மக்களையும் அபிவிருத்தியடையச்  செய்து  ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பல தியாகங்களை செய்துள்ளார்.

எமது நாட்டில் தொடர்ந்த யுத்தம் இவ்வளவு விரைவில் முடிவடையுமென்று நாம் எவரும் நினைத்திருக்கவில்லை. கடந்த 30 வருடங்களாக நாட்டின் நாலாபக்கங்களிலும் கொலைகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றன.  நான் கூட 02 தடவைகள் புலிகளின் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தேன். இருந்த போதும், என்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இன்று அந்த நிலைமாற்றப்பட்டு அபிவிருத்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், எமது நாட்டையும் நாட்டின் தமைமைத்துவத்தையும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில விசமிகள் அந்நிய சக்திகளுக்கு காட்டிக்கொடுக்கின்ற நடவடிக்கையினை செய்து வருகின்றனர்.

நாம் இன்னும் அந்நிய நாடுகளை நம்பி அவர்களிடம் கையேந்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கினறனர்
பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சை உருவாக்கி அதன் மூலம் எமது மக்களுக்கு பணியாற்றக்கூடிய திவிநெகும வாழ்வின் எழுச்சி திணைக்களத்தை ஏற்படுத்தி அதன் சேவைகளை விஷ;தரிக்கும் நோக்குடன் தேசிய ரீதியில் 6 வலயங்கள் பிரிக்கப்பட்டு  திறந்து வைக்கப்படுகின்றன.

விசேடமாக இன்று திறந்துவைக்கப்படுகின்ற 4ஆவது வலயம் மிகவும் முக்கிய மூன்று மாவட்டங்களை இணைக்கின்றது. அதாவது அம்பாறை மாவட்டம், மொனராகலை மாவட்டம், அம்பாந்தோட்டை மாவட்டம் எமது நாட்டின் தேசிய அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்ற மாவட்டமாகும்.

கிராமங்கள் தோறும் பணியாற்றுவதற்காக சுமார் 45,000 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர் உங்கள் பணிகள் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் காலங்களில் சகல அபிவிருத்திப் பணிகளும் நிதிப்பயன்பாடுகளும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .