2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மிரிஜ்ஜவில,சூரியவௌ முதலீட்டு வலயங்களாக பிரகடனம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏம். இஸட். எம். இர்பான்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மிரிஜ்ஜவில மற்றும் சூரியவௌ பிரதேசங்கள் முதலீட்டு வலயங்களாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன.

இவ் முதலீட்டு வலயங்களை பார்வையிட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்தார்.

இவருடன் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷசும் கலந்து கொண்டார்.

இவர்கள் அதிகாரிகளுடன் மாஹம்புர மஹிந்த ராஜபக்ஸ துறைமுகத்தில் இப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுபட்டு இதற்கென 2500 மிலியன் ருபா ஒதுக்கப்பட்டதோடு இரண்டு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மிரிஜ்ஜவிலைப் பிரதேசத்தில் 103 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் கைத்தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் சூரியவௌவில் விளையாட்டு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு இவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் பணிகள் ஒக்தோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .