2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

Super User   / 2013 ஒக்டோபர் 10 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரன தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றது.

பேருவளை பிரதேச கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இயங்கும் ஐ.எல்.எம். நலன்புரி நிலையத்தின் ஏற்பாட்டிலான இந்த கருத்தரங்கு இலங்கையின் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலையான பேருவளை, மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா நவோத்யா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.அஸ்கர் கான் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.

பேருவளை, மாளிகாஹேனை ஸம் றிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், மஹகொடை ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் வித்தியாலயம் மற்றும் மருதானை அல் பாஸியத்துல் நஸ்ரியா நவோத்யா பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .