2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்
 
ஹம்பாந்தோட்டை நகரில் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்று திரும்பிவரும் போது படகு விபத்துக்குள்ளாகி காணாமல் போன நபர் நேற்று சனிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 
 
படகில் இருவர் சென்றுள்ளதோடு ஒருவர் நீந்தி வந்து கரைசேர்ந்துள்ளார். 42 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையான அஸ்மி நிஸார் என்பவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடித்துறைமுகத்தில் குறுக்காக இடப்பட்டிருக்கும் அலைதாங்கியினாலேயே இவ் விபத்து ஏற்படுவதாக தெரிவித்து இதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நகரில் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால் ஹம்பாந்தோட்டை - கதிர்காம பிரதான பாதையின் போக்குவரத்து பல மணி நேரமாக தடைப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதைக்கு குறுக்காக படகுகளை இட்டு தீ மூட்டிதோடு ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் சூழவுள்ள கடைகளும் மூடப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .