2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மங்களவை கைது செய்ய உத்தரவு

Super User   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாத்தறை நீதவானினால் இன்று திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி பாத யாத்திரையொன்று 5 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் மீது மாத்தறை பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உட்பட 12 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .