2025 மே 02, வெள்ளிக்கிழமை

சடலம் மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.எம். இர்பான்

ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பொது மயானத்திற்கு அருகாமையிலுள்ள பழைய பதகிரிய வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளிடம் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஹம்பாந்தோட்டை பொலிஸார் சடலத்தை பார்வையிட்டபோது, அது அழுகிய நிலையில் எரி காயங்களுடன் மிருகங்களினால் சாப்பிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

குறித்த சடலம் மாத்தறை, புஹூல்வெல்லை, கிரிந்தையை சேர்ந்த 26 வயதான சதுன் லஹிரு எனும் இளைஞனின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .